மாவட்ட செய்திகள்

சாயல்குடி அருகே கிராம மக்களுக்கு வேைலவாய்ப்பு தரும் தொழிலான பனைத்தும்பு தயாரிப்பு அமைத்துள்ளது. + "||" + Palmyra production industry which provides employment to the rural people

சாயல்குடி அருகே கிராம மக்களுக்கு வேைலவாய்ப்பு தரும் தொழிலான பனைத்தும்பு தயாரிப்பு அமைத்துள்ளது.

சாயல்குடி அருகே கிராம மக்களுக்கு வேைலவாய்ப்பு தரும் தொழிலான பனைத்தும்பு தயாரிப்பு அமைத்துள்ளது.
கிராம மக்களுக்கு வேலைவாய்ப்புதரும் பனைத்தும்பு தயாரிப்பு தொழில்
சாயல்குடி
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பனைமரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்த லாடசாமி பனைமரத்தின் மட்டையில் இருந்து எடுக்கப்படும் பனைத்தும்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவரது மகன்கள் கரிமுகன், கரன் வாசகன் ஆகியோர் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.  பட்டதாரிகளான இவர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 
இதுகுறித்து பட்டதாரி இளைஞர்கள் கரிமுகன், கரன் வாசகன் ஆகியோர் கூறுகையில், பருவகாலத்தில் மட்டுமேன செய்யக்கூடிய பனைத்தும்பு தயாரிக்கும் தொழில் சாவல்களை கொண்டது. தற்போது பனைமரங்கள் அழிக்கப்பட்ட வருவதால் தும்பு தயாரிக்க தேவைப்படும் பனை மட்டை மத்தைகள் போதிய அளவு கிடைப்பது இல்லை. 
முன்னோர்கள்  தங்களின் கைகளால் பனைத்தும்பு தயாரித்தனர். தற்போது நாங்கள் எந்திரங்களின் உதவியுடன் இந்த தொழிலை செய்து வருகிறோம். பனைமட்டை பத்தைகளை எந்திரத்தில் நசுக்கி பின்னர் அதை சுத்தம் செய்தால் தும்பு கிடைக்கும். பின்னர் அதை உலர்த்தி  தரம் பிரித்து  விற்பனை செய்து வருகிறோம். பனைத்தும்பு தயாரிப்பை குடிசைத்தொழில் செய்து வருகிறோம். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் இத்தொழில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. 
இந்த தொழிலை விரிவுபடுத்தி கிராமங்களில் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். 
ராணுவ தளவாடங்களை தூய்மைப்படுத்த இந்த பனைமரத்தின் தும்பு பயன்படுகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் இதை ஏற்றுமதி செய்து வந்தோம். ஊரடங்கு காலம் என்பதால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபரான கீர்த்தி சுரேஷ்
நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதோடு ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், ஓட்டல் தொழில், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், ஜவுளி கடைகள் என்றெல்லாம் தொழில் செய்கிறார்கள்.
2. தொழில் ரீதியான பிரச்சினைகளை மீனவர்கள் பேசி தீர்க்க வேண்டும்
தொழில் ரீதியான பிரச்சினைகளை மீனவர்கள் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.
3. மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
4. தொழில், வணிக நிறுவன உரிமங்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.