ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் பெண்ணுக்கு கலெக்டர் நிதி உதவி


ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் பெண்ணுக்கு கலெக்டர் நிதி உதவி
x
தினத்தந்தி 3 Jun 2021 12:54 AM IST (Updated: 3 Jun 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் பெண்ணுக்கு கலெக்டர் நிதி உதவி வழங்கினார்

அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் காந்தி சிவகாமி. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் ஜப்பான் டோக்கியோவில் நடைபெற உள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வட்டெறிதல் போட்டியில் எப்-11 பிரிவில் பங்கேற்க தமிழ்நாடு சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காந்தி சிவகாமி டெல்லியில் வருகிற ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் நடைபெற உள்ள சோதனை போட்டியில் பங்கேற்க உள்ளார். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் காந்தி சிவகாமிக்கு டெல்லியில் தங்குவதற்கும், பயன செலவிற்காகவும் ரூ.50 ஆயிரத்தை கலெக்டர் ரத்னா வழங்கி, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். காந்தி சிவகாமி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 89 பதக்கங்கள் பெற்று அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story