திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து சரிவு


திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து சரிவு
x
தினத்தந்தி 3 Jun 2021 1:48 AM IST (Updated: 3 Jun 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து சரிந்துள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 73 ஆக உள்ளது. நேற்று மட்டும் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலிருந்து 564 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீளமுடியாமல் திருச்சி விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பனியாற்றும் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 52 வயதான கார் டிரைவர் உள்பட 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 11,302 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 987 ஆக இருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று தொற்று பாதிப்பும், உயிர்பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 258, ஆக்சிஜன் வசதி அல்லாத படுக்கைகள் 707, தீவிர சிகிச்சைப் பிரிவில் 30 என மொத்தம் 995 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story