மண் பரிசோதனை முகாம்


மண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 3 Jun 2021 3:34 AM IST (Updated: 3 Jun 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே மண் பரிசோதனை முகாம் நடந்தது.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே வாடியூரில் மண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் தங்களது வயல்களில் மண்மாதிரிகளை சேகரித்து பயிர் சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்றும், மண்மாதிரி சேகரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினார். பின்னர் அவர், நிலக்கடலை தாரணி ரக விதைப்பண்ணை திடலையும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பாசன குழாய்களையும், கருவந்தா உழவர் உற்பத்தியாளர் ‘சி’ குழுவினர் நடமாடும் காய்கறி வாகனத்தில் உரிய விலையில் காய்கறி விற்பனை செய்வதையும் ஆய்வு செய்தார்.

வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் திருப்பதி மாரியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சுமன், மாரியம்மாள், கஸ்தூரி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story