சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 85 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த 17 நாட்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 17 நாட்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை என்ற நோயும் தாக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 17 நாட்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 67 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 53 பேரும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 14 பேரும் அடங்குவர். இவர்களுக்கும் இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், என்றார். நேற்று முன்தினம் 4 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story