அயோத்தியாபட்டணம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


அயோத்தியாபட்டணம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 4:49 AM IST (Updated: 3 Jun 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியாபட்டணம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

அயோத்தியாபட்டணம்:
அயோத்தியாபட்டணத்தை அடுத்த காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பூசாரிபட்டியிலிருந்து காந்திநகர் செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் இவர், அருநூற்றுமலை பள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்த வரதன் மகன் கருப்பன் (வயது 49) என்பதும், அனுப்பூர் மேலக்காடு கிராமத்தில் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவதும் தெரிந்தது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி மலைப்பகுதியில் பறவைகள், விலங்குகளை வேட்டையாடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து இவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து விவசாயி கருப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story