சேலத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவுக்கு பலி


சேலத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 3 Jun 2021 5:08 AM IST (Updated: 3 Jun 2021 5:08 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.

சேலம்:
முசிறி அடுத்த தண்டலைப்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் சுதா. இவர் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்தநிலையில் இவருக்கு கடந்த 28-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பெண் கிராம நிர்வாக அதிகாரி சுதா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் கிராம நிர்வாக அதிகாரி இறந்துபோன சம்பவம் வருவாய்த் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய சொந்த ஊர் சேலம் ஆகும். அவருக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

Next Story