ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள்
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். 318 முழு நேர ரேஷன் கடைகள், 89 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. முழு ஊரடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
முழு ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவித்தொகையாக ரூ.2,000 வழங்கப்படடது. மேலும் நடப்பு ஜூன் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற பொருட்கள் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
டோக்கன் வினியோகம்
இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர்.
அதில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் அதிகம்பேர் கடைகளுக்கு வருவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி கூறும்போது, நீலகிரியில் கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 முதல் தவணை அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு இந்த மாதம் வழங்கப்படும். தற்போது அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story