ஊட்டி அருகே கொரோனா விதிகளை மீறிய 3 கடைகள் மூடப்பட்டது
ஊட்டி அருகே கொரோனா விதிகளை மீறிய 3 கடைகள் மூடப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி அருகே தலைகுந்தா, எச்.பி.எப். ஆகிய பகுதியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கடைகள் செயல்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து நேற்று ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது எச்.பி.எப். பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட்டுகள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றிருந்தனர். உடனே அந்த பாலகம் மூடப்பட்டது. மேலும் முழு ஊரடங்கில் இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.
இதை மீறி தலைகுந்தாவில் கோழி இறைச்சி கடை திறக்கப்பட்டு இருந்தது. அந்த கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு கடையும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மூடப்பட்டது. மேலும் இந்த 3 கடைகளின் உரிமையாளர்கள் மீது கொரோனா விதிமுறைகளை மீறியதாக புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story