நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 3 Jun 2021 6:57 AM IST (Updated: 3 Jun 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த 14 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,196 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 809 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்து உள்ளது.
7,451 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 620 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 26 ஆயிரத்து 283 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 271 பேர் இறந்து விட்ட நிலையில், 7,451 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முழு ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story