ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் காளிகாபுரம் கிராமம் அருகே ஆர்.கே. பேட்டை போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, கள்ளச்சாராயத்தை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா செங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தரசு (வயது 22), அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் பள்ளிப்பட்டு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிடிபட்ட சொகுசு காரில 14 மூட்டைகளில் 1,300 ஆந்திர மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. காரை ஓட்டிச்சென்ற சென்னை திருவெற்றியூரை சேர்ந்த டிரைவர் சிவகுமார் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story