மாமல்லபுரத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி வியாபாரம் செய்த டீக்கடைக்கு ‘சீல்’ - போலீசார் நடவடிக்கை


மாமல்லபுரத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி வியாபாரம் செய்த டீக்கடைக்கு ‘சீல்’ - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2021 9:36 AM IST (Updated: 3 Jun 2021 9:36 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி வியாபாரம் செய்த டீக்கடைக்கு ‘சீல்’ போலீசார் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி டீக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாகவும், அங்கு சமூக இடைவெளியின்றி பலர் கூடுவதாகவும் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஊரடங்கு விதிகளை மதிக்காமல் டீ வியாபாரம் நடைபெற்று வந்த டீக்கடை ஒன்றை மூடி ‘சீல்’ வைத்தனர்.

அதேபோல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம், தேவனேரி, புதுகல்பாக்கம், கொக்கிலமேடு, நெம்மேலி, புதுஎடையூர்குப்பம், கிருஷ்ணன் காரணை, இளந்தோப்பு, பூஞ்சேரி, சாவடி, பேரூர் உள்ளிட்ட இடங்களுக்கும் போலீசார் ஆய்வு செய்து, ஊரடங்கு விதிகளை மீறி யாராவது தேனீர் கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றரா? என சோதனை நடத்தினர்.

Next Story