13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2021 11:49 AM IST (Updated: 3 Jun 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் லிங்கேஸ்வரி (வயது 19). இவருக்கு வருகிற 13-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் திருமணத்தில் லிங்கேஸ்வரிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் உள்ள அறையில் லிங்கேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story