மூத்த குடிமக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போட முடியாதது ஏன்? மும்பை ஐகோர்ட்டு மீண்டும் கேள்வி
மும்பையில் மூத்த குடிமக்களுக்கு வீடு, வீடாக சென்று மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் என்ன தடையுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
மும்பையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், படுக்கையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் சக்கர நாற்காலி வாழ்க்கையை நடத்தி வருபவர்களால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனைக்கு செல்ல இயலாது. எனவே இவர்களுக்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க வேண்டும் என ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த ஐகோர்ட்டு இந்த திட்டத்தை தொடங்குவது குறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. அப்போது இந்த திட்டம் சாத்தியமற்றது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு உள்ளிட்டவர்களுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி தீபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பல்வேறு வீட்டு வசதி சங்கங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இவ்வாறு செய்யமுடியுமானால் உங்களுக்கு(அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்) வீடு, வீடாக சென்று மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் என்ன தடையுள்ளது என்று கேள்வி எழுப்பினர். இந்தநிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அனில் இதுகுறித்து பதில் அளிக்க மேலும் அவகாசம் கோரினார். இதை தொடர்ந்து ஐகோர்ட்டு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.
Related Tags :
Next Story