சினிமா கலைஞர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவி தொகை நடிகர் யஷ் அறிவிப்பு


சினிமா கலைஞர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவி தொகை நடிகர் யஷ் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 8:34 PM IST (Updated: 3 Jun 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா கலைஞர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவி தொகை நடிகர் யஷ் அறிவிப்பு.

பெங்களூரு, 

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பர் யஷ். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள சினிமா கலைஞர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக கன்னட சினிமா வா்த்தக சபையின் செயலாளர் ரவீந்திரா, முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்திற்கு நடிகர் யஷ் எழுதி உள்ள கடிதத்தில், கொரோனா காரணமாக சினிமா பணிகள் நடைபெறாததால் கலைஞர்கள், பிற தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கை கட்டி இருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளேன். கன்னட திரைத்துறையில் உள்ள 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கூடிய விரைவில் தலா ரூ.5 ஆயிரத்தை உதவி தொகையாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் நடிகர் யஷ்சுக்கு கன்னடம் தவிர பிற மொழியிலும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது 3 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் என ரூ.1½ கோடியை வழங்க நடிகர் யஷ் முடிவு செய்திருப்பதை, அவரது ரசிகர்கள் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story