17 ஆயிரம் மனுக்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட துறைவாரியாக பிரித்து அனுப்பும் பணி


17 ஆயிரம் மனுக்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட துறைவாரியாக பிரித்து அனுப்பும் பணி
x
தினத்தந்தி 3 Jun 2021 10:21 PM IST (Updated: 3 Jun 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

17 ஆயிரம் மனுக்கள் துறைவாரியாக பிரித்து அனுப்பும் பணி

திருவண்ணாமலை

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அப்போது பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கி சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் பெறப்பட்ட 17 ஆயிரத்து 81 மனுக்கள் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனுக்கள் துறை வாரியாக, தாலுகா வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படும். 

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண துறை ரீதியாகவும், தாலுகா வாரியாகவும் மனுக்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story