ஒரு மாத ஊதியத்தை வழங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்


ஒரு மாத ஊதியத்தை வழங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 3 Jun 2021 10:24 PM IST (Updated: 3 Jun 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் கொரோனா சிறப்பு பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

திருப்பூர
முதல்-அமைச்சரின் கொரோனா சிறப்பு பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினர் நிதி அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் முத்து செல்வம் என்பவர் தனது ஒரு மாத சம்பளமான ரூ.31 ஆயிரத்து 384-ஐ முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதற்கான காசோலையை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நேற்று வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட கலெக்டர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை பாராட்டினார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி உடனிருந்தார்.
இதுபோல் திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த மகாநதி மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களது சேமிப்பு தொகையான ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் கொரோனா சிறப்பு பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். இதற்கான காசோலையை கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மகளிர் சுயஉதவி குழுவினர் வழங்கினார்கள்.

Next Story