பொள்ளாச்சி பகுதிகளில் 156 பேருக்கு கொரோனா தொற்று
பொள்ளாச்சி பகுதிகளில் 156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் 156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
156 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி நகரில் நேற்று 20 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 29 பேருக்கும், வால்பாறை தாலுகாவில் 3 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 28 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 23 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 23 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 30 பேருக்கும் சேர்த்து மொத்தம் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆர்.பொன்னாபுரத்தில் இருந்து நல்லிகவுண்டன்பாளையம் செல்லும் சாலையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் சி.கோபாலபுரம் வழியாக சுற்றி செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
3410 பேர் குணம்
வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய தாலுகாக்களில் கொரோனா 2-வது அலையில் இதுவரைக்கும் 8,321 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3,410 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 625 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொற்று அதிகம் பாதித்த 37 இடங்கள் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story