கொரோனா தடுப்பு பணிக்காக 100 நர்சுகளை தேர்வு செய்ய நேர்காணல்
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக, 100 தற்காலிக நர்சுகளை தேர்வு செய்ய நேர் முகத்தேர்வு நடைபெற்றது.
கோவை
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக, 100 தற்காலிக நர்சுகளை தேர்வு செய்ய நேர் முகத்தேர்வு நடைபெற்றது.
நர்சுகள் தேர்வு
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக வீடு, வீடாக சென்று காய்ச்சல் குறித்து விசாரணை மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா பரிசோதனைகளையும் அதிகபடுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த 100 நர்சுகளை தற்காலிக அடிப்படியில் தேர்வு செய்ய உள்ளதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
நேர்முக தேர்வு
இதற்கான நேர்முக தேர்வு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த தற்காலிக நர்சு பணிக்காக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் முடித்த பட்டதாரிகள், டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொண்டனர்.
3 மாத ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்படும் நர்சுகளுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேர்முக தேர்விற்கு வந்த நர்சுகள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் முன் அனுபவம் குறித்து தேர்வில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
100 பேர் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story