வாலாங்குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணிகள்


வாலாங்குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணிகள்
x
தினத்தந்தி 3 Jun 2021 10:46 PM IST (Updated: 3 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

வாலாங்குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணிகள்

கோவை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த குளத்தில் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் சுங்கம் செல்லும் வழியில் இந்த குளக்கரையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்தமாக வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, குளத்தில் செத்துக்கிடந்த மீன்களை அகற்றும் பணி  நடந்தது. இதற்காக சிலர். பரிசலில் சென்று, 10-க்கும் மேற்பட்ட சாக்குகளில் அந்த மீன்கள் எடுத்து அப்புறப்படுத்தினார்கள். 


Next Story