வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 111 தெருக்கள் தகரத்தால் அடைப்பு
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 111 தெருக்கள் தகரத்தால் அடைப்பு
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் 2-வது அலையினால் ஏராளமான நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதித்த குடும்பத்தினரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்து பெட்டகம் மற்றும் அந்த பகுதியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை, கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் செய்யப்பட்டன.
மேலும் ஒரே தெருவில் 3 வீடுகளில் கொரோனா அல்லது ஒரேவீட்டில் 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் அந்த தெரு தகரத்தால் அடைக்கப்படும். அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 111 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் விரைவில் பல பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள தகரங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story