சீக்கராஜபுரத்தில் மளிகை கடைக்கு ரூ.5,000 அபராதம்


சீக்கராஜபுரத்தில் மளிகை கடைக்கு ரூ.5,000 அபராதம்
x
தினத்தந்தி 3 Jun 2021 10:59 PM IST (Updated: 3 Jun 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

மளிகை கடைக்கு ரூ.5,000 அபராதம்

ராணிப்பேட்டை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வில்லா, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த மளிகை கடைக்கு சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் ரூ.5,000 அபராதம் விதித்தனர். 

மேலும் சிப்காட் பகுதியில் வீணாக சுற்றித்திரிந்த 10 போரின் மோட்டார் சைக்கிள்களையும் சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர். முக கவசம் அணியாத 14 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று ராணிப்பேட்டையில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த 10 பேரின் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. முக கவசம் அணியாத 20 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story