நடமாடும் வாகனங்களை தேடி சென்று பழங்கள் வாங்கும் பொதுமக்கள்
நடமாடும் வாகனங்களை தேடி சென்று பழங்கள் வாங்கும் பொதுமக்கள்
தர்மபுரி:
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை தோட்டக்கலைத் துறை மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலமாக குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரில் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில் பொதுமக்களுக்கு தேவையான பழங்கள் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக கிடைப்பதில் நடைமுறை சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.இதனால் தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் நடமாடும் பழ வாகனங்களை தேடிச்சென்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழங்களை வாங்குகிறார்கள்.பழங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
======
Related Tags :
Next Story