துணி காயப்போடும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி


துணி காயப்போடும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 3 Jun 2021 11:21 PM IST (Updated: 3 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

துணி காயப்போடும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி

கணபதி

கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 52). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

 கண்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது வீட்டில் வைத்து துணி துவைத்த விஜயலட்சுமி மொட்டை மாடிக்கு சென்று அந்த துணிகளை காயப்போட்டார். 

அப்போது அருகே சென்ற மின்சார கம்பியில் அவருடைய கை பட்டதால் மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story