கோவில் அர்ச்சகர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது
கோவில் அர்ச்சகர்களுக்கு காய்கறி தொகுப்பு
காரைக்குடி
காரைக்குடி சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 13 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி காரைக்குடியை அடுத்த அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் அருண் தலைமை தாங்கினார். காரைக்குடி தாசில்தார் அந்தோணி காய்கறி தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் சத்யசாய் சேவா நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் சுவாமிநாதன், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் அர்ச்சகர் பாலாஜி மற்றும் காரை சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story