ஏலகிரி மலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது


ஏலகிரி மலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 11:36 PM IST (Updated: 3 Jun 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டை

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் 

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் அருள் என்ற அருள் முருகன் (வயது45). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 2019- ஆம் ஆண்டு அருள் நடை பயிற்சிக்கு சென்றபோது காரில் வந்த மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றது.

 இதுகுறித்து இவரது குடும்பத்தினர் ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலமாகவும், அருளின் செல்போன் அழைப்புகள் மூலமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அருளை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் கடத்தி வைத்திருந்தது ெதரியவந்தது.

3 பேர் கைது

 இதனையடுத்து செல்போன் டவர் மூலம் போலீசார் கண்காணித்து அருளை மீட்டனர். அவரை கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அருளை பணத்திற்காக கடத்தியதாக சம்பத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான 3 பேரை தேடி வந்தனர்.

 இந்தநிலையில் நேற்று ஏலகிரி மலையில் உள்ள முத்தனூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜன் உள்ளிட்ட போலீசார் சென்று 3 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த  கருணாமூர்த்தி (32), சூளகிரி அடுத்த கரிய சந்திரம் பகுதியை சேர்ந்த சின்ன நாயுடு (27), அதே பகுதியை சேர்ந்த ரூபே (24) என்பதும், இவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர் அருளை கடத்தியவர்கள் என்பதும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story