கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி


கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
x
தினத்தந்தி 3 Jun 2021 11:53 PM IST (Updated: 3 Jun 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 326 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
326 பேருக்கு தொற்று 
 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும்பொருட்டு தளர்வில்லாத ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   இதன் காரணமாக ஓரிரு மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது என்றாலும் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 326 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் பலி 
அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 454 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 10 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 3,492 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story