பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த மீன்பிடி படகுகள்


பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த மீன்பிடி படகுகள்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:57 PM IST (Updated: 3 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த மீன்பிடி படகுகள்

ராமேசுவரம்
பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக இரண்டு இழுவை கப்பல்கள் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாம்பன் தூக்குப் பாலம் நேற்று பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து புயலால் கடந்த வாரம் பாம்பன் தெற்கு துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள்  நேற்று அணிவகுத்தபடி வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து ராமேசுவரம் பகுதிக்கு சென்றன.

Next Story