லாரி மோதி மின்கம்பங்கள் சேதம்


லாரி மோதி மின்கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 4 Jun 2021 12:07 AM IST (Updated: 4 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

குளித்தலை
கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக கரூர் மார்க்கமாக சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. திருச்சி-கரூர் சாலையில் குளித்தலை அருகே உள்ள வதியம் பகுதியில் அந்த லாரி சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த 2 மின்கம்பங்களில் லாரி மோதியது. இதனால் அதில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பிகள் இழுத்த காரணத்தால் மேலும் ஒரு மின்கம்பம் என மொத்தம் 3 மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அதில் இணைக்கப் பட்டிருந்த மின் கம்பிகள் அறுந்ததால் மின்சாரம் தடைபட்டது. ஆனால் அங்கு வேறு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் அப்பகுதி வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாத வகையில் வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை மின்சார வாரிய அலுவலர்கள் லாரி மோதி சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்களை பொருத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வதியம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் மின் வினியோகம் வழங்கப்பட உள்ளதாக மின்சார வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story