ஊரடங்கு விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு


ஊரடங்கு விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Jun 2021 1:20 AM IST (Updated: 4 Jun 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு(போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், காதர்கான் உள்ளிட்ட போலீசார் 4 ரோடு, கடைவீதி, திருச்சி ரோடு, விருத்தாச்சலம் ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2 நாட்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story