மது விற்ற டீக்கடைக்காரர் கைது
பெரம்பலூரில் மது விற்ற டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்து, 16 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர்;
போலீசார் ரோந்து
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக எடுத்து வந்து, அதிக விலைக்கு விற்பதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரம்பலூர் எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகரில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
டீக்கடைக்காரர் கைது
இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தி விசாரித்தனர். இதில் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சுந்தரராஜன்(வயது 47) என்பவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்றது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார், 16 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சுந்தரராஜனை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story