விவசாயிகள், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை


விவசாயிகள், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 4 Jun 2021 2:00 AM IST (Updated: 4 Jun 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை தற்காலிக பூ மார்க்கெட்டில் விவசாயிகள், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நிலக்கோட்டை: 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் நிலக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டது. 

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் செங்கட்டாம்பட்டி பிரிவு பகுதியில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட அரசு அனுமதி அளித்தது. அதன்படி தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

 அங்கு பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதார துறையினர் மார்க்கெட் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்து சென்றனர். 


பின்னர் அங்கு கொரோனா பரிசோதனை மையத்தை உருவாக்கிய அதிகாரிகள், மார்க்கெட்டில் இருந்த விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். 



விவசாயிகள், பொதுமக்களில் பலர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டாலும் ஏராளமானோர் அங்கிருந்து நைசாக வெளியேறி தப்பியோடினர். 





கொரோனா பரிசோதனை செய்யும் பணியை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


Next Story