பால் வேன் மோதியதில் படுகாயம் அடைந்த விவசாயி சாவு


பால் வேன் மோதியதில் படுகாயம் அடைந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 4 Jun 2021 2:29 AM IST (Updated: 4 Jun 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

பால் வேன் மோதியதில் படுகாயம் அடைந்த விவசாயி உயிரிழந்தார்

கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருேக உள்ள வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). விவசாயியான இவர், சம்பவத்தன்று வீரடிப்பட்டியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புது நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீரடிப்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பால் நிறுவனத்தின் வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மதியழகன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story