கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 4 Jun 2021 2:34 AM IST (Updated: 4 Jun 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

குப்பையன்பட்டி கிராமத்தில் கொேரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

ஆதனக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட குப்பையன்பட்டி கிராமத்தில் கொேரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மலையாண்டி தலைமை தாங்கினார். இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா கலந்து கொண்டு ஒருவருக்கு தடுப்பூசி சலுத்தி முகாமினை தொடங்கி வைத்தார். இதில், 75- க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில், புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் (கிராம ஊராட்சி) மற்றும் பலர் கலந்து கொண்டார். பின்னர் மருத்துவ அலுவலர் (பொறுப்பு) குணசீலி தலைமையில், மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏதேனும் உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொண்டனர்.


Next Story