நெல்லையில் தண்டவாள பராமரிப்பு பணி


நெல்லையில் தண்டவாள பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 4 Jun 2021 2:41 AM IST (Updated: 4 Jun 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்தது.

நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட அரசு உத்தரவிட்டது. போக்குவரத்து பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக மேம்பாலம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தண்டவாள பராமரிப்பு பணி நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரெயில்வே ஊழியர்கள் சிலர் மட்டும் அந்த பணியில் ஈடுபட்டனர். இதனால் பணி முடிவடையவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி நேற்று மாலை வரை நடந்தது. அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து நடைபெற்றது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா ஊரடங்கால் அதிக அளவில் வாகன போக்குவரத்து இல்லை. இருந்தாலும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடிய சில வாகனங்கள் மட்டும் அந்த வழியாக வந்தன. அவற்றை பெருமாள்புரம் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

Next Story