மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் உள்ள முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 7 தமிழர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மேலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் முகம்மது அலி தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை தொகுதி தலைவர் சேக்தாவூத், செயலாளர் அபுதாஹிர், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணை தலைவர் மீரான் அன்வாரி உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
மேலும் கொரோனா பேரிடர் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தமது வீடுகளில் குடும்பத்துடன் பதாகை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story