ஏற்காடு அண்ணா பூங்காவில் பூந்தொட்டிகளால் கொரோனா விழிப்புணர்வு வாசகம்
ஏற்காடு அண்ணா பூங்காவில் பூந்தொட்டிகளால் கொரோனா விழிப்புணர்வு வாசகம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு:
ஏற்காடு அண்ணா பூங்காவில் பூந்தொட்டிகளால் கொரோனா விழிப்புணர்வு வாசகம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரத்து
ஏற்காட்டில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவும். இதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதையொட்டி மே மாதத்தில் ஏற்காடு பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தோட்டக்கலை துறையினர் 1,500 தொட்டிகளில் பல்வேறு வகையான பூக்களுக்கு பதியம் போட்டு வளர்த்து வந்தனர். ஏற்காடு அண்ணா பூங்காவில் ரூ.15 லட்சம் செலவில் தொட்டிகளில் பூச்செடிகளை வளர்த்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் 2-வது அலையின் காரணமாக மலர் கண்காட்சி, கோடை விழா போன்றவை நடத்த முடியாமல் போனது.
விழிப்புணர்வு வாசகம்
இதனிடையே 1,500-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பூச்செடிகளில் மலர்ந்த பூக்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. அதனால் அந்த பூந்தொட்டிகளை மலர் கண்காட்சி திடலில் காட்சிக்கு அடுக்கி வைப்பது போல் அடுக்கி வைத்துள்ளனர். பூங்காவின் புல்வெளியில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போடுங்கள், உங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று ஆங்கிலத்தில் ‘டேக் வேக்சின் செக்யூர் யுவர் லைப்’ என்ற வாசகத்தை பூந்தொட்டிகளை கொண்டு அடுக்கி வைத்து உருவாக்கி உள்ளனர்.
எனினும் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Related Tags :
Next Story