தேன்கனிக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
தேன்கனிக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ். லேஅவுட் மாரியம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் திகடரப்பள்ளியைச் சேர்ந்த திம்மராஜ் (வயது 42), சங்கர் (46), ராஜப்பா (50), குர்ரப்பா (50), முரளி (33), ஸ்ரீதர் (30), என தெரியவந்தது.
அவர்கள் 6 பேரையும் கைது செய்ததுடன், 300 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தன்சூர் ஏரி அருகே சூதாடிய பெல்லேலப்பா (26), கிருஷ்ணன் (42), திருமால் (35), ரமேஷ் (39) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல தேன்கனிக்கோட்டை போலீசார் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த சதாம் (22), பயாஸ் (27), சையத் பாஷா (32), ரப்பானி (40), காதர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story