உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 363 பேருக்கு ரூ.5.68 கோடியில் நலத்திட்ட உதவிகள்


உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 363 பேருக்கு ரூ.5.68 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 4 Jun 2021 4:28 AM IST (Updated: 4 Jun 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 363 பேருக்கு ரூ.5 கோடியே 68 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.

செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை பெற்று அவற்றின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, ஒரு சிறப்பு அலுவலர் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன,

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் 9,293 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 603 மனுக்கள் ஏற்கப்பட்டு 7,688 மனுக்கள் நிலுவையிலும், 1,002 மனுக்கள் மறுபரிசீலனை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 363 பேருக்கு ரூ.5.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இதில் வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா, பல்வேறு உதவித் தொகைகள், இறப்பு, சாதி சான்றிதழ்கள் மற்றும் நத்தம் சிட்டா நகல் என 3.37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 234 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பசுமை வீடு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கான்கிரீட் கால்வாய், சாலைகள், கிணறு, சுற்றுச்சுவர், கழிவுநீர் கால்வாய், தெரு விளக்குகள், கதிர் அடிக்கும் களம், குடிநீர் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி என உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 5.47 கோடி ரூபாய் மதிப்பில் 84 பணிகளுக்கான ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 17.67 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 தனியார் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட பொறுப்பு அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி கலெக்டர்கள் கற்பகவள்ளி, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story