சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 10 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 10 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 4:44 AM IST (Updated: 4 Jun 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 69 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை மாவட்டத்தில் ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கருப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில்  நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் 9 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story