தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தகவல் மையம்


தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தகவல் மையம்
x
தினத்தந்தி 4 Jun 2021 4:58 AM IST (Updated: 4 Jun 2021 7:08 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தகவல் மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை பிரிவு மையம் மற்றும் கொரோனா தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன், தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் சமீரன் கூறுகையில், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தகவல் மையம் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஆலோசனை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உரிய சிகிச்சைகள் வழங்குவர். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்பவர்களின் உடல்நிலை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள அவர்களது உறவினர்கள் கொரோனா தகவல் மையத்தை 6374711850, 6374711851 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story