கூடலூரில் மது கடத்தி வந்த 2 பேர் கைது
கூடலூரில் காய்கறி மூட்டைக்குள் 18 மதுபாட்டிகள் பதுக்கி வைத்து கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு காய்கறி லாரிகளில் மது கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு லாரியை மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது காய்கறி மூட்டைக்குள் 18 மதுபாட்டிகள் பதுக்கி வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த மது பாட்டில்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது கடத்தி வந்த கூடலூர் அருகே உள்ள பாணந்துறையை சேர்ந்த நிலோபர் (வயது 27), சிராஜூதீன் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story