நீலகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் விளைபொருட்களை சேமித்து வைக்க ஏற்பாடு


நீலகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் விளைபொருட்களை சேமித்து வைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 4 Jun 2021 6:25 AM IST (Updated: 4 Jun 2021 6:36 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்க 9 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

விவசாய உறுப்பினர்களை கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒன்றிணைந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால், குழுவில் இல்லாத சிறு, குறு விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை அதிக வாடகை செலுத்தி சரக்கு வாகனங்களில் ஊட்டியில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் காய்கறிகள் தேக்கம் அடையும் நிலை காணப்பட்டது.

இதை தொடர்ந்து தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குளிர்பதன கிடங்கு மற்றும் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் விவசாயிகள் கட்டணம் செலுத்தி காய்கறிகளை உள்ளிட்ட விளைபொருட்களை சேகரித்து வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி ஊட்டி ரோஜா பூங்கா அருகே 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு இருக்கிறது. இங்கு விவசாயிகள் சிலர் அறுவடை செய்த உருளைக்கிழங்கை மூட்டைகளில் சேமித்து வைத்து உள்ளனர். ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இது தவிர கோத்தகிரி, சுள்ளிக்கூடு, அல்லஞ்சி, அணிக்கொரை, உப்பட்டி, அய்யன்கொல்லி உள்பட 8 இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் விவசாயிகள் காய்கறிகளை சேகரித்து வைக்கலாம்.

இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் 8 முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் தலா 10 டன் என மொத்தம் 80 டன் விளைபொருட்களை சேமித்து வைக்க வசதி உள்ளது. மேலும் ஊட்டி ரோஜா பூங்கா அருகே குளிர்பதன கிடங்கில் சேமிக்கப்படுகிறது. 

பின்னர் தேவைக்கேற்ப எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம். அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தோட்டக்கலைத்துறையிடம் வழங்கி சந்தைப்படுத்தலாம் என்றனர்.


Next Story