மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் திருட்டு; 3 பேர் கைது + "||" + Theft at factory in Gummidipoondi Chipkot industrial area; 3 people arrested

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் திருட்டு; 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் திருட்டு; 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தாமிர உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவில் இரும்பு வேலியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக ஆந்திர மாநிலம் தடா அடுத்த பெரியவேட்டை சேர்ந்த ஆனந்தன் (வயது 46), புதுகும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த அஜித் (24) மற்றும் நங்கபள்ளம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை- ரூ.35 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை- ரூ.35 ஆயிரம் திருட்டு போனது.
2. வீட்டில் ரூ.53 ஆயிரம் திருட்டு
வீட்டில் ரூ.53 ஆயிரம் திருட்டு போனது.
3. நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு
4. 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பேட்டரி திருட்டு
குளித்தலையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பேட்டரியை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

அதிகம் வாசிக்கப்பட்டவை