திருக்கழுக்குன்றம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம்
திருக்கழுக்குன்றம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 35). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (26). இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் கடந்த 1-ந்தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் காயத்ரி தூங்குவதற்காக படுக்கையறைக்கு சென்றார். கருணாகரன் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கருணாகரன் எழுந்து படுக்கையறைக்கு சென்றார். அங்கு காயத்ரி தனது சேலையில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சா லட்சுமி விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இதுதொடர்பாக செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story