சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ஆலந்தூர் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் மாதவபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). கால் டாக்சி டிரைவர். இவர், தனது காரை ஆலந்தூர்-வேளச்சேரி சாலையில் உள்ள கோவில் சுவரை ஒட்டி நிறுத்தி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பரங்கிமலை போலீசாரும், கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புகூடானது.
அப்போது இந்த பகுதியில் பூமிக்கடியில் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிளும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தூண்டிக்கப்பட்டது. பின்னர் பழுதடைந்த மின்சார கேபிளை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் நிறுத்தியிருந்த இடத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்வயரில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story