பாடகி வைஷாலி மாதே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்


பாடகி வைஷாலி மாதே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்
x
தினத்தந்தி 4 Jun 2021 3:48 PM IST (Updated: 4 Jun 2021 3:48 PM IST)
t-max-icont-min-icon

பாடகி வைஷாலி மாதே தேசியவாத காங்கிரசில் நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித்பவார் டுவிட்டரில் கூறியுள்ளார்.

தனியார் டி.வி. நிகழ்ச்சியான 'சரிகமபா'வில் கடந்த 2009-ம் ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமானவர் பாடகி வைஷாலி மாதே (வயது36). இவர் பாஜிராவ் மஸ்தானி படத்தில் இடம்பெற்ற பிங்கா உள்ளிட்ட பல சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். மேலும் மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று உள்ளார். பாடகி வைஷாலி மாதே நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார், சுப்ரியா சுலே எம்.பி. ஆகியோர் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தார். பாடகி தேசியவாத காங்கிரஸ் சினிமா மற்றும் கலாச்சார பிரிவு உறுப்பினராகவும், அந்த பிரிவின் விதர்பா மண்டல தலைவராகவும் 
நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித்பவார் டுவிட்டாில் கூறியுள்ளார்.

Next Story