ஊரடங்கை மீறி விற்பனைக்கு வைத்திருந்த பலா பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
ஊரடங்கை மீறி விற்பனைக்கு வைத்திருந்த பலா பழங்களை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருபுவனை,
புதுச்சேரியில் கொரோ னாவை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு சந்தை தோப்பு பகுதியில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சாலையோரம் பலா பழங்களை குவித்துவைத்து விற்பனை செய்தனர். இதனை வாங்க சமூக இடை வெளியின்றி பொதுமக்கள் திரண்டனர்.
இதுபற்றி அறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக் குமார், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு, கொம்யூன் பஞ்சாயத்து பொறியாளர்கள் மல்லிகார்ஜூன், கோகுலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று பலா பழங்களை பறிமுதல் செய்து கொம்யூன் பஞ்சாயத்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
இதேபோல் திருபுவனை, திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு பகுதியில் மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை திறந்து வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story