ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மாயம்


ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மாயம்
x
தினத்தந்தி 4 Jun 2021 8:58 PM IST (Updated: 4 Jun 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

நீதிமன்ற சொத்து வைப்பறையில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மாயமானது.

விழுப்புரம், 

விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் தட்டச்சராக பணியாற்றி வரும் தமிழ்செல்வன் (வயது 29) என்பவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் தலைமை எழுத்தராக சையத்ஹாசன் என்பவர் கடந்த 10.6.2020 முதல் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம்தான் நீதிமன்ற வழக்கு சொத்து மற்றும் சொத்தின் வைப்பறை சாவி பொறுப்பு உள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட்டு பூர்ணிமா, அந்த சொத்து வைப்பறையை ஆய்வு செய்தபோது கண்டமங்கலம், விக்கிரவாண்டி ஆகிய போலீஸ் நிலைய வழக்குகளின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களான ரூ.74 ஆயிரத்து 400 மதிப்புள்ள 620 மதுபாட்டில்கள் மாயமாகி இருந்தது என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் தலைமை எழுத்தர் சையத்ஹாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story