தலைஞாயிறு பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி


தலைஞாயிறு பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 4 Jun 2021 9:16 PM IST (Updated: 4 Jun 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேளாண்மை துறை இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாய்மேடு:
தலைஞாயிறு பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேளாண்மை துறை இணை இயக்குனர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறுவை சாகுபடி

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன .மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால்  குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
தூர்வாரும் பணி
தலைஞாயிறு பகுதியில் . புது ஆறு ,மல்லியனாறு, வலம்புரி வாய்க்கால் ஆகியவை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 3 வாய்க்கால்களும் சுமார்  7½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்படுகின்றன. தூர்வாரும் பணியினை வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார் .இந்த ஆய்வின் போது தொழில்நுட்பத் துறை பொறியாளர் பாலசுப்பிரமணியன், வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், ஒப்பந்தக்காரர் வீரகுமார் ஆகியோர் உடனிருந்தனர் .

Next Story